சிங்கள தேசத்தால் ஆக்கிமிக்கப்பட்ட தமிழர் தேசம் விடுதலைஅடையும் நாளே தமிழர்களின், தமிழர் தேசத்தின், சுதந்திர நாள்.
COLOMBO, SRI LANKA, January 31, 2025 /
EINPresswire.com/ -- 1948, பெப்ரவரி 4 இல் இருந்து சிறிலங்கா தனது சுதந்திர நாளாகக் கொண்டாடிவருகின்றது ஆனால் அன்றைய நாள் ஆங்கிலேயரால்பறிக்கப்பட்ட தமிழர்களின் இறையாண்மை சிங்கள இனவாதப்பூதத்திற்கு தரைவார்க்கப்பட்ட நாளாகும்.
சிங்கள தேசத்தில் ஆட்சி மாறினாலும் பேரினவாத மூலோபாயத்தில்எந்த மாற்றமும் நிகழப்போவதில்லை. மாறாக சிங்களக்குடியேற்றங்கள் அகற்றப்படவோ, நிறுத்தப்படவோ அல்லது பெளத்தமயமாக்கல் அகற்றப்படப் போவதில்லை, வலிந்து காணாமல்ஆக்கப்பட்ட உறவுகட்கு நீதிவழங்கவோ, போர்க்குற்றவாளிகள்தண்டிக்கப்படவோ எந்தவாய்ப்பும் இல்லை.
இனப்படுகொலைக்கு முழுமையாக ஒத்துழைத்து தமிழர்களை, தமிழர்தேசத்தை அழித்து ஆக்கிர மித்தவர்களிடம் நீதியை எதிர்பார்க்கமுடியாது.
காலங்காலமாக தமிழர்தேசம் இந்நாளை கரிநாளாகபிரகடணப்படுத்தி சிங்கள தேசத்திற்கெதிராகப் போராடிவருவதுபோல் இம்முறையும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள்வடகிழக்கில் போராட்டங்களுக்கான அறைகூவலை விடுத்துள்ளனர்.
தமிழர் தாயகத்தில் நடைபெறும் போராட்டங்களுக்கு பொதுமக்கள், பல்கலைக்கழக மாணவர்கள், கல்லூரி, பாடசாலை மாணவர்கள், சிவில் சமூகத்தினர், தமிழ் தேசிய அரசியல் கட்சிகள், மக்கள்பிரதிநிநிகள், வர்த்தக சங்கத்தினர் மற்றும் அனைவரும் கறுப்புப்பட்டிகள் அணிந்தும், கறுப்புக்
கொடிகளை ஏந்தியும், வர்த்தக நிலையங்கள், பொது இடங்கள், பல்கலைக்கழகம், கல்லூரி, பாடசாலைகள் அனைத்திலும் கறுப்புக்கொடிகளைப் பறக்கவிட்டும் தமது எதிப்பைத் தெரிவுப்பதுடன்காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின், தாய்மாரின் எதிர்ப்புப்போராட்டத்தில் பெருமளவில் கலந்து கொள்ளுமாறு நாடுகடந்ததமிழீழ அரசாங்கம் உரிமையுடன் அழைப்பு விடுக்கின்றது.
மேலும் புலம்பெயர் தேசங்களில் சிறிலங்கா சுதந்திரதின எதிர்ப்புப்போராட்டத்திற்கு பல்வேறுபட்ட அமைப்புக்கள் விடுத்த அழைப்பிற்கு
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது தோழமையைத் தெரிவித்துக்கொள்வதுடன் புலம் பெயர் தமிழர்கள் கறுப்புப்பட்டி அணிந்தும், தமிழர் வணிக நிலையங்களில் கறுப்புக் கொடிகளைப் பறக்கவிட்டுஎமது எதிர்ப்பை வெளிப்படுத்துமாறு அறைகூவல் விடுக்கின்றோம்.
** அத்துடன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இளையோரின் இணையவழிகண்டன எதிப்பு கருத்தாடல் நிகழ்வு பெப்ரவரி 4 இல் ஏற்பாடுசெய்துள்ளது. இதில் ஐரோப்பிய, கனேடிய இளையோர் பங்குபற்றுவது குறிப்பிடத்க்கது.
சிங்கள தேசத்தால் ஆக்கிமிக்கப்பட்ட தமிழர் தேசம் விடுதலைஅடையும் நாளே தமிழர்களின், தமிழர் தேசத்தின் சுதந்திர நாள். தமிழீழம் என்ற இலக்கை அடையும்வரை தொடர்ந்து போராடுவோம்.
தமிழர் தலைவிதி தமிழர் கையில்! தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்!
* நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் பற்றி
About Transnational Government of Tamil Eelam (TGTE)
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் (நா.க.த.அ) என்பது, ஜனநாயக ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, உலகெங்கிலும் பல நாடுகளில் வாழும் இலங்கைத் தீவைச் சோந்த பத்து இலட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்களுக்கான அரசாங்கமாகும்.
2009ஆம் ஆண்டு இலங்கை அரசால் பெருமளவில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து நா.க.த.அ. உருவாக்கப்பட்டது. 135 அரசவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக உலகெங்கிலும் வாழும் தமிழர்களிடையே, சர்வதேச கண்காணிப்பாளர்களின் மேற்பார்வையில் நா.க.த.அ, நாலாவது தடவை தேர்தல்களை நடாத்தியுள்ளது.
இதன் அரசவையானது, மேலவை (செனற் சபை), பிரதிநிதிகள் அவை என இரண்டு அவைகளையும் மற்றும் அமைச்சரவை ஒன்றையும் கொண்டுள்ளது.
தேசியம், தாயகம் மற்றும் சுயநிர்ணயம் ஆகிய கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு,அமைதியான ஜனநாயக மற்றும் இராஜதந்திர வழிகளில் தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளை வென்றெடுக்கும் பரப்புரையை நா.க.த.அ முன்னெடுத்துள்ளது. மேலும், அதன் அரசியல் நோக்கங்களை,அமைதியான வழிகளில் மட்டுமே அடைய வேண்டும் எனவும் அதன் அரசியலமைப்பு வலியுறுத்துகிறது.
தமிழ் மக்களுக்கு எதிராகப் போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை புரிந்த குற்றவாளிகளைப் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்த வேண்டும் என்று சர்வதேச சமூகத்திடம் கோருவதுடன், தமிழர்களின் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்க பொது சன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனவும் நா.க.த.அ. வலியுறுத்துகிறது.
நாடுகடந்த தமிழீழ அரசாங்க பிரதமர் திரு.விசுவநாதன் உருத்ரகுமாரன், நியூயோர்க்கைத் தளமாக்க் கொண்ட ஒரு வழக்கறிஞர் ஆவார்.
Follow us on Twitter: @TGTE_PMO
Email: pmo@tgte.org
Web:
www.tgte-us.orgVisuvanathan Rudrakumaran
Transnational Government of Tamil Eelam (TGTE)
+1 614-202-3377
r.thave@tgte.org
Visit us on social media:
Facebook
Twitter